எதிர்வரும் காதலர் தினத்தையொட்டி காதலர் தினம் பற்றிய சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். காதலர் தினம் உலகளாவிய ரீதியில் எங்கும் பரந்திருக்கும் காதலுக்காகவும் காதலர்களுக்காகவும் கொண்டாடப்படுகிறது. இந்த பொன் நாளில் கணவர்கள் தங்கள் காதல் மனைவிக்கும், ஏற்கனவே காதலித்து கொண்டிருப்பவர்களும் தங்கள் காதலனுக்கோ காதலிக்கோ மற்றும் ஒரு தலையாக காதலிப்பவர்கள் தங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்துவதற்காக ரோஜா மலர்கள் மற்றும் வித்தியாசமான பரிசுப்பொருட்கள் அன்பளிப்பதுண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள். இங்கு நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கும் கருத்து ரோஜா மலர்களை பற்றியது.. சிவப்பு ரோஜா தான் நாம் காதலை வெளிபடுத்துவதற்காக அடையாளமாக எங்கள் மனதில் உள்ள அந்த பிடித்தமானவருக்கு கொடுக்கும் சிறந்த பரிசு என்பது எல்லோருக்கும் தெரிந்தாலும், ஏன் தனி சிவப்பு ரோஜா மலர் ஒன்றை கொடுக்கிறோம் என்பது தெரியுமா?
தெரியாவிட்டால் இங்கே தெரிந்து கொள்ளுங்கள் ....
மலர்களால் பல்வேறு உணர்வுகளை அல்லது எண்ணங்களை உங்களுக்கு பிடித்தமானவருக்கு நீங்கள் வெளிக்காட்டலாம்.. இவ்வளவு ஏன் காதலர்கள் வார்த்தைகளே இல்லாமல் மலர்களால் கூட பேசுவதுண்டு. காதலுக்கு சிறந்த அர்த்தத்தை வெளிக்காட்டும் மலர் என்றால் அது சிவப்பு ரோஜா தான். அது ஏன் தெரியுமா? சிவப்பு ரோஜா மலர் மிக அழகாக கருதப்படுவதுதான். உரோம் காலத்தில் காதலை வெளிபடுத்த ஒற்றை சிவப்பு ரோஜா மலரை தான் மாற்றிகொள்வதுண்டு. சிவப்பு ரோஜாவின் அர்த்தம் "நான் உன்னை காதலிக்கிறேன்" என்பதுதான். அவ்வாறான ரோம் காலம் தொட்டு சிவப்பு ரோஜா சுக்கிரனுக்கு( வீனஸ்) காதலின் கடவுளுக்கு அடையாளமாக கருதப்படுகிறது.
ஒற்றை வெள்ளை ரோஜா ஒன்றுக்கு இரண்டு வகை அர்த்தம் உண்டு. அதில் ஒன்று மன்னிப்புக்காக கொடுப்பது.. அதாவது தனக்கு பிரியமானவரிடம் மன்னிப்பு கேட்பவர் ஒற்றை வெள்ளை ரோஜா ஒன்றை கொடுத்தல் இந்த அர்த்தத்தை வெளிபடுத்துகிறது. இந்த வெள்ளை ரோஜாவுக்கான இரண்டாம் அர்த்தம் " நீ தூய்மையானவள்/ தூய்மையானவன், நம் காதல் தூய்மையானது என்பதை குறிக்கிறது.
ஒற்றை மஞ்சள் ரோஜா சந்தோஷத்தையும் காதலையும் வெளிபடுத்துகிறது. உங்கள் பிரியமானவருக்கு, அவருடைய அன்பான காதலில் நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.
உங்கள் பிரியமானவர் அழகாக இருக்கிறார் என்பதை அடையாளமாக சொல்ல விரும்பினால் ஒற்றை ஊதா ரோஜா ஒன்றை கொடுங்கள். அந்த ஒற்றை ரோஜா “நீ மிகவும் அழகாக இருக்கிறாய்" என்பதை வெளிப்படுத்துகிறது.
இளஞ்சிவப்பு நிற ரோஜா வை நீங்கள் உங்கள் பிரியமானவருக்கு கொடுத்தால் "நான் உன்னை நினைக்கிறேன்" அல்லது உன் நினைவாகவே இருக்கிறேன் என்பதை குறிக்கிறது...
ஆரேஞ் நிற ரோஜா நட்பின் சிறந்த அடையாளமாக கருதப்படுகிறது.
கறுப்பு ரோஜா ஒரு உறவு முடிந்து போவதை குறிக்கிறது.